சீவக சிந்தாமணி 1201 - 1205 of 3145 பாடல்கள்
1201. யானை வெண் மருப்பினால் இயற்றி யாவதும்
மான மாக் கவரி வெண் மயிரின் வேய்ந்தன
தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய
கானவர் குரம்பை சூழ் காடு தோன்றுமே
விளக்கவுரை :
1202. கடுந் துடிக் குரலொடு கடையும் கள் குரல்
நெடுந் கை மான் குரல் மணி அருவி நீள் குரல்
அடும் புலிக் குரலொடு மயங்கி அஞ்சிய
இடும்பை மான் குரல் விளி எங்கும் மிக்கவே
விளக்கவுரை :
[ads-post]
1203. பொன் அணி திகிரி அம் செல்வன் பொற்பு உடைக்
கன்னிய மகளிரின் காண்டற்கு அரியன
நல் மணி புரித்தன வாவி நான்கு உள
கல் நவில் தோளினாய் காட்டு வாயவே
விளக்கவுரை :
1204. அருங் கலச் சேயிதழ் ஆர்ந்த வாவி ஒன்று
இரும்பு எரி பொன் செயும் இரத நீரது ஒன்று
ஒருங்கு நோய் தீர்ப்பது ஒன்று அமிர்தம் அல்லது ஒன்று
அரும்பு அவிழ் குவளை நீர் வாவி ஆகுமே
விளக்கவுரை :
1205. கை அடு சிலையினர் காட்டுள் வாழ்பவர்
பை உடை யாக்கையர் பாவ மூர்த்தியர்
ஐ எனத் தோன்றுவர் தோன்றி ஆள் அழித்து
உய்வகை அரிது என உடலம் கொள்பவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1201 - 1205 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books