சீவக சிந்தாமணி 1196 - 1200 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1196 - 1200 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1196. குரவம் நீடிய கொன்றை அம் கானின் வாய்
வரகு வாளில் தொலைச்சுநர் பாடலின்
அரவ வண்டொடு தேன் இனம் யாழ் செயும்
பரவை மா நிலம் பன்னிரு காதமே

விளக்கவுரை :

1197. ஆங்கு அவ் எல்லை இகந்து அடு தேறலும்
பூங் கள் பொன் குடமும் நிறைத்து ஈண்டிய
ஏங்கு கம்பலத்து இன்னிசை சூழ் வயல்
தாங்கு சீர்த் தக்க நாட்டு அணி காண்டியே

விளக்கவுரை :

[ads-post]

1198. பாளைவாய் கமுகின் நெற்றி படு பழம் உதிர விண்டு
நீள் கழைக் கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி
வாளை வாய் உறைப்ப நக்கி வராலொடு மறலும் என்ப
காளை நீ கடந்து செல்லும் காமரு கவின் கொள் நாடே

விளக்கவுரை :

1199. அங்கு அதன் தனது இடம் கடந்து போம் வழிப்
பொங்கு பூஞ் சண்பகப் போது போர்த்து உராய்
அங்கு அந்நாட்டு அரிவையர் கூந்தல் நாறித் தேன்
எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றுமே

விளக்கவுரை :

1200. மின் உடை மணிபல வரன்றி மேதகு
தன் உடை நலம் பகிர்ந்து உலகம் ஊட்டலின்
பொன் உடைக் கலை அல்குல் கணிகைப் பூம்புனல்
மன் உடை வேலினாய் வல்லை நீந்தினால்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books