சீவக சிந்தாமணி 1191 - 1195 of 3145 பாடல்கள்
1191. குலை வாழை பழுத்த கொழும் பழனும்
நிலை மாத்தன தேம் உறும் தீம் கனியும்
பலவு ஈன்றன முள் உடை அள் அமிர்தும்
மலை யாற்று அயல் யாவும் மடுத்து உளவே
விளக்கவுரை :
1192. வளர் பைம் பொனும் வாள் ஒளி நீள் மணியும்
ஒளிர்கின்றன ஓசனை நீள் நிலமும்
தளர்வு ஒன்று இலர் தாபதர் தாம் விழையும்
குளிர் கொண்டது ஓர் சித்திர கூடம் அதே
விளக்கவுரை :
[ads-post]
1193. முழவின் இசை மூரி முழங்கு அருவி
கழையின் துணி சந்தொடு கல் என ஈர்த்து
இழியும் வயிரத்தொடு இனம் மணி கொண்டு
அழியும் புனல் அஞ்சனமா நதியே
விளக்கவுரை :
1194. இது பள்ளி இடம் பனிமால் வரைதான்
அது தௌ அறல் யாறு உவை தேமரமாக்
கதி தள்ளி இராது கடைப்பிடி நீ
மதி தள்ளி இடும் வழை சூழ் பொழிலே
விளக்கவுரை :
1195. வருந்தும் நீர்மை அம் மாதவர் பள்ளியுள்
குருந்தம் ஏறிய கூர் அரும்பார் முல்லை
பொருந்து கேள்வரைப் புல்லிய பொன் அனார்
மருங்கு போன்று அணி மாக் கவின் கொண்டதே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1191 - 1195 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books