சீவக சிந்தாமணி 1186 - 1190 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1186 - 1190 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1186. நுதி கொண்டன வெம் பரல் நுண் இலை வேல்
பதி கொண்டு பரந்தன போன்று உளவால்
விதி கண்டவர் அல்லது மீது செலார்
வதி கொண்டது ஓர் வெவ் வழல்வாய் சொலின் வேம்

விளக்கவுரை :

1187. குழவிப் பிடி குஞ்சரம் மாழ்கும் எனத்
தழுவிச் சுடு வெவ் அழல் தாங்குவன
கெழுவிப் பெடையைக் கிளர் சேவல் தழீஇத்
தொழுதிச் சிறகில் துயர் ஆற்றுவன

விளக்கவுரை :

[ads-post]

1188. கலை இன் பிணை கன்றிடும் என்று கசிந்து
இலையின் நிழல் அவ்வயின் இன்மையான்
நிலையின் நிழல் தான் அது நின்று கொடுத்து
உலையும் வெயில் நின்று உருகும் உரவோய்

விளக்கவுரை :

1189. கட நாகம் மதம் கலந்து உக்க நிலத்து
உடை நாண் என மின் என ஒண்மணி அம்
பட நாகம் அழன்று பதைத்து வரும்
மடனாம் அயலார் மனம் வைப்பதுவே

விளக்கவுரை :

1190. நெறியில் தளர்வார் தம நெஞ்சு உருகிப்
பொறியில் தளர்வார் புரிவார் சடையார்
அறி மற்றவர் தாபதர் அவ்வழியார்
கறை முற்றிய காமரு வேலவனே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books