சீவக சிந்தாமணி 1181 - 1185 of 3145 பாடல்கள்
1181. காந்திய மணியொடு வயிரம் பொன் கலந்து
ஏந்தல் நின் தோள் என இரண்டு குன்று போய்ப்
பூந் துகில் மகளிரில் பொலிந்து போர்த்தது ஓர்
பேம் தரு பேய் வனம் பெரிய காண்டியே
விளக்கவுரை :
1182. இள வெயில் மணிவரை எறித்திட்டு அன்னது ஓர்
அளவு அரு குங்குமத்து அகன்ற மார்பினாய்
களவினின் அணி நலம் கவர்ந்த கள்வ என்று
உளர் மணிக் கொம்பனார் உருகி நைபவே
விளக்கவுரை :
[ads-post]
1183. பழம் குழைந்து அனையது ஓர் மெலிவின் பை என
முழங்கு அழல் வேட்கையின் முறுகி ஊர்தரத்
தழும் பதம் இது எனச் சார்ந்து புல்லலும்
பிழிந்து உயிர் உண்டிடும் பேய்கள் ஆபவே
விளக்கவுரை :
1184. கண்ட பேய் நகரின் நீங்கிக் காவதம் கடந்து தோன்றும்
வெண்டலைப் புணரி வீசிக் கிடந்த பொன் தீவிற்று ஆகிக்
கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடிக் கரும்பு உடுத்தவேலி
நுண் துகில் நுழைந்த அல்குல் பவளம் ஒத்து இனியது ஒன்றே
விளக்கவுரை :
1185. படு மழை பருவம் பொய்யாப் பல்லவ தேயம் என்னும்
தட மலர்க் குவளைப் பட்டம் தழுவிய யாணர் நல் நட்டு
இடை நெறி அசைவு தீர இருந்து அவண் ஏகல் உற்றால்
கட நெறி கடத்தற்கு இன்னாக் கல் அதர் அத்தம் உண்டே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1181 - 1185 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books