சீவக சிந்தாமணி 1176 - 1180 of 3145 பாடல்கள்
1176. ஆற்றினது அமைதி அங்கு அறியக் கூறினான்
ஊற்றுநீர்க் கூவலுள் உறையும் மீன் அனார்
வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார்
போற்று நீ போவல் யான் என்று கூறினாற்கு
விளக்கவுரை :
1177. இம் மலைக்கு இரண்டு காதம் இறந்த பின் இருண்டு தோன்றும்
அம் மலை அரண பாதம் என்ப அதன் தாள் வாய்த் தோன்றும்
தம் வினை கழுவு கின்றார் சாரணர் தரணி காவல்
வெம்மையின் அகன்று போந்து விழைவு அறத் துறந்து விட்டார்
விளக்கவுரை :
[ads-post]
1178. சிந்தையில் பருதி அன்னார் சேவடி இறைஞ்ச லோடும்
வெம் திறல் இயக்கி தோன்றி விருந்து எதிர் கொண்டு பேணித்
தந்து அவள் அமிர்தம் ஊட்ட உண்டு அவள் பிரிந்த காலைச்
சந்துடைச் சாரல் சேறி தரணி மேல் திலகம் அன்னாய்
விளக்கவுரை :
1179. அங்கு நின்று அகன்றபின் ஐ ஐங் காவதம்
வெம் களி விடும் மத வேழப் பேர் இனம்
தங்கிய காடு அது தனிச் செல்வார் இலை
கங்கையின் கரையது கடலின் தோன்றுமே
விளக்கவுரை :
1180. புனல் எரி தவழ்ந்து எனப் பூத்த தாமரை
வனம் அது வாள் என வாளை பாய்வன
மனம் மகிழ் பெருந் தடம் வலத்து இட்டு ஏகுதி
இன மலர்த் தாரினாய் இரண்டு காதமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1176 - 1180 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books