சீவக சிந்தாமணி 1171 - 1175 of 3145 பாடல்கள்
1171. இரு மலர்க் குவளை உண்கண் இமைப்பு இலாப் பயத்தைப் பெற்ற
அரி மலர்த் தாரினான் தன் அழகு கண்டு அளிய என்னாத்
திரு மலர்க் கோதை ஐம்பால் தேவியர் தொடர்பு கேட்ப
எரி மணிப் பூணினானும் இன்னணம் இயம்பினானே
விளக்கவுரை :
1172. பிணிக் குலத்து அகம் வயின் பிறந்த நோய் கெடுத்து
அணித் தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான்
கணிப்பு அருங் குணத் தொகைக் காளை என்றனன்
மணிக் கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான்
விளக்கவுரை :
[ads-post]
1173. கடல் சுறவு உயரிய காளை அன்னவன்
அடற்கு அரும் பகை கெடுத்து அகன்ற நீள் நிலம்
மடத்தகை அவளொடும் வதுவை நாட்டி நாம்
கொடுக்குவம் எனத் தெய்வ மகளிர் கூறினார்
விளக்கவுரை :
1174. செரு நிலத்து அவன் உயிர் செகுத்து மற்று எனக்கு
இரு நிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ
திரு நிலக் கிழமையும் தேவர் தேயமும்
தரும் நிலத்து எமக்கு எனில் தருகும் தன்மையீர்
விளக்கவுரை :
1175. மண்மிசைக் கிடந்தன மலையும் கானமும்
நண்ணுதற்கு அரியன நாடும் பொய்கையும்
கண் மனம் குளிர்ப்பன ஆறும் காண்பதற்கு
எண்ணம் ஒன்று உளது எனக்கு இலங்கு பூணினாய்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1171 - 1175 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books