சீவக சிந்தாமணி 1166 - 1170 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1166 - 1170 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

பதுமையார் இலம்பகம்

1166. வீட்டரும் சிறையில் தேவன் விடுத்து உயக் கொள்ளப் பட்ட
கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான் கொல் என்னில்
கூட்டு அரக்கு எறிந்த பஞ்சின் கூடிய பளிங்கில் தோன்றும்
தீட்டரும் படிவம் அன்னான் திறம் கிளந்து உரைத்தும் அன்றே

விளக்கவுரை :

1167. விலங்கி வில் உமியும் பூணான் விழுச் சிறைப்பட்ட போழ்தும்
அலங்கல் அம் தாரினான் வந்து அருஞ் சிறை விடுத்த போழ்தும்
புலம்பலும் மகிழ்வும் நெஞ்சில் பொலிதலும் இன்றிப் பொன் ஆர்ந்து
உலம் கலந்து உயர்ந்த தோளான் ஊழ் வினை என்று விட்டான்

விளக்கவுரை :

[ads-post]

1168. வானரம் உகள நாக மலர் துதைந்து ஒழுக அஞ்சித்
தேன் இரைத்து எழுந்து திங்கள் இறால் எனச் சென்று மொய்க்கும்
கான் அமர் அருவிக் குன்றில் காய் கதிர் சுமந்து ஓர் திங்கள்
மேல் நிமிர்ந்து ஏறி ஆங்குத் தேவன் வெற்பு ஏறினானே

விளக்கவுரை :

1169. திங்களைத் தெளித்திட்ட அன்ன பால் கடல் திரை செய் தெண்ணீர்
வெம் கள் விட்டு அலர்ந்த கண்ணி விண்ணவன் உரிமை தன்னால்
மங்கல வகையின் ஆட்டி மணி அணி கலங்கள் சேர்த்திப்
பங்கய நெடுங் கணாளைப் பவித்திர குமரன் என்றான்

விளக்கவுரை :

1170. பொன் அணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள் போலும்
பின்னிய முத்த மாலைப் பிணையல் தாழ் குடையின் நீழல்
கன்னியர் கவரி வீசக் கனமணிக் குழை வில் வீச
இன்னிசைக் கூத்து நோக்கி இருந்தனன் திலகம் அன்னான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books