சீவக சிந்தாமணி 1096 - 1100 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1096 - 1100 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1096. கங்கையின் சுழியில் பட்ட காமரு பிணையின் மாழ்கி
அங்கு அவர்க்கு உற்றது உள்ளி அவல நீர் அழுந்து கின்ற
குங்குமக் கொடியோடு ஏந்திக் கோலம் வீற்றிருந்த கொம்மைப்
பொங்கு இள முலையினார்க்குப் புரவலன் இதனைச் சொன்னான்

விளக்கவுரை :

1097. கண் துயில் அனந்தர் போலக் கதிகளுள் தோன்று மாறும்
விட்டு உயிர் போகு மாறும் வீடு பெற்று உயரு மாறும்
உள்பட உணர்ந்த யானே உள் குழைந்து உருகல் செல்லேன்
எள் பகவு அனைத்தும் ஆர்வம் ஏதமே இரங்கல் வேண்டா

விளக்கவுரை :

[ads-post]

1098. நல் மணி இழந்த நாகர் நல் இளம் படியர் போல
இன்மணி இழந்து சாம்பி இரு நிலம் இவர்கள் எய்த
மின் அணி மதியம் கோள்வாய் விசும்பு இடை நடப்பதே போல்
கல்மணி உமிழும் பூணான் கடை பல கடந்து சென்றான்

விளக்கவுரை :

1099. வெந்தனம் மனம் என வெள்ளை நோக்கின் முள் எயிற்று
அந்துவர்ப் பவளவாய் அம் மழலை இன்சொலார்
பந்து பாவை பைங் கழங்கு பைம் பொன் முற்றில் சிற்றிலுள்
நொந்து வைத்து நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார்

விளக்கவுரை :

1100. மல்லிகைம் மலிந்த மாலை சோர ஆர்ந்த குண்டலம்
வில் இலங்க மின்னுக் கோட்ட வீணை விட்டு வெய்து உராய்
ஒல் எனச் சிலம்பு அரற்ற வீதி மல்க ஓடினார்
சில் சுணங்கு இள முலைச் செழுமலர்த் தடம் கணார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books