சீவக சிந்தாமணி 1091 - 1095 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1091 - 1095 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1091. ஈன்ற தாய் தந்தை வேண்ட இவ் இடர் உற்றது என்றால்
தோன்றலுக்கு ஆண்மை குன்றாது என்ற சொல் இமிழின் பூட்டி
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முட்டினும் முருக்கும் ஆற்றல்
வான்தரு மாரி வண் கை மதவலி பிணிக்கப் பட்டான்

விளக்கவுரை :

1092. குழல் உடைச் சிகழிகைக் குமரன் தோள் இணை
கழல் உடை இளையவர் கச்சின் வீக்கலின்
அழல் உடைக் கடவுளை அரவு சேர்ந்து என
விழவு உடை முது நகர் விலாவிக் கின்றதே

விளக்கவுரை :

[ads-post]

1093. தோள் ஆர் முத்தும் தொல் முலைக் கோட்டு துயல் முத்தும்
வாள் ஆர் உண் கண் வந்து இழி முத்தும் இவை சிந்தக்
காளாய் நம்பி சீவக சாமி என் நல்தாய்
மீளாத் துன்ப நீள் கடல் மின்னின் மிசை வீழ்ந்தாள்

விளக்கவுரை :

1094. பாலார் ஆவிப் பைந்துகில் ஏந்திப் பட நாகம்
போல் ஆம் அல்குல் பொன்தொடி பூங் கண் குணமாலை
ஏலாது ஏலாது எம் பெருமானுக்கு இஃது என்னா
நூலார் கோதை நுங்கு எரிவாய்ப் பட்டது ஒத்தாள்

விளக்கவுரை :

1095. எரி தவழ் குன்றத்து உச்சி இரும்பொறிக் கலாப மஞ்ஞை
இரிவன போன்று மாடத்து இல் உறை தெய்வம் அன்னார்
பரிவுறு மனத்தின் ஓடிப் பட்டதை உணர்ந்து பொன்தார்
அரி உறழ் மொய்ம்பவோ என்று ஆகுலப் பூசல் செய்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books