சீவக சிந்தாமணி 1086 - 1090 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1086 - 1090 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1086. கடுகிய இளையர் நோக்கும் கண்ணிய பொருளும் எண்ணி
அடுசிலை அழல ஏந்தி ஆர் உயிர் பருகற்கு ஒத்த
விடுகணை தெரிந்து தானை வீக்கற விசித்து வெய்தாத்
தொடுகழல் நரல் வீக்கிச் சொல்லுமின் வந்தது என்றான்

விளக்கவுரை :

1087. அடி நிழல் தருக என்று எம் ஆணை வேந்து அருளிச் செய்தான்
வடி மலர்த் தாரினாய் நீ வருக என வானின் உச்சி
இடி உரும் ஏற்றின் சீறி இருநிலம் சுடுதற்கு ஒத்த
கடி மதில் மூன்றும் எய்த கடவுளின் கனன்று சொன்னான்

விளக்கவுரை :

[ads-post]

1088. வாள் இழுக்கு உற்ற கண்ணாள் வரு முலை நயந்து வேந்தன்
கோள் இழுக்கு உற்ற பின்றைக் கோத் தொழில் நடாத்துகின்றான்
நாள் இழுக்கு உற்று வீழ்வது இன்று கொல் நந்த திண்தேர்
தோள் இழுக்கு உற்ற மொய்ம்ப பண் என சொல்லினானே

விளக்கவுரை :

1089. வேந்தொடு மாறு கோடல் விளிகுற்றார் தொழில் அது ஆகும்
காய்ந்திடு வெகுளி நீக்கிக் கை கட்டி இவனை உய்த்தால்
ஆய்ந்து அடும் அழற்சி நீங்கும் அது பொருள் என்று நல்ல
சாந்து உடை மார்பன் தாதை தன் மனத்து இழைக்கின்றானே

விளக்கவுரை :

1090. ஊன் பிறங்கு ஒளிறும் வேலான் ஓர்த்து தன் உவாத்தி சொல்லால்
தான் புறம் கட்டப் பட்டுத் தன் சினம் தணிந்து நிற்பத்
தேன் பிறங்கு அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும்
கோன் புறம் காப்பச் சேறல் குணம் எனக் கூறினாரே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books