சீவக சிந்தாமணி 1081 - 1085 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1081 - 1085 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1081. சண்பக மாலை வேய்ந்து சந்தனம் பளிதம் தீற்றி
விண் புக நாறு சாந்தின் விழுமுலைக் காம வல்லி
கொண்டு எழுந்து உருவு காட்டி முகத்திடைக் குளித்துத் தோள்மேல்
வண் தளிர் ஈன்று சுட்டி வாள் நுதல் பூப்ப வைத்தான்

விளக்கவுரை :

1082. பண் அடி வீயும் தீம் சொல் பாவை நின் வனப்பிற்கு எல்லாம்
கண்ணடி கருங் கண் என்னும் அம்பு அறாத் தூணி தன்னால்
புண் உடை மார்பத்து ஓவாது எய்தியால் எங்குப் பெற்றாய்
பெண் உடைப் பேதை என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினானே

விளக்கவுரை :

[ads-post]

1083. திங்கள் சேர் முடியினானும் செல்வியும் போன்று செம் பொன்
இங்கு வார் கழலினானும் கோதையும் இருந்த போழ்தில்
சிங்க ஏறு எள்ளிச் சூழ்ந்த சிறு நரிக் குழாத்தின் சூழ்ந்தார்
அங்கு அது கண்ட தாதி ஐயனுக்கு இன்னது என்றாள்

விளக்கவுரை :

1084. என்று அவள் உரைப்பக் கேட்டே இடிபட முழங்கிச் செந்தீ
நின்று எரிவதனை ஒத்து நீள் முழைச் சிங்க ஏறு
தன் துணைப் பெட்டை யோடு தான் புறப்பட்டது ஒத்தான்
குன்று இரண்டு இருந்த போலும் குங்கும குவவுத் தோளான்

விளக்கவுரை :

1085. பொன்னரி மாலை தாழப் போது அணி கூந்தல் ஏந்திப்
பன்னரு மாலை யாற்குப் பட்டதை எவன் கொல் என்னாப்
பின்னரும் மாலை ஓராள் பெரு நடுக்கு உற்று நின்றாள்
மன்னரு மாலை நாகம் மழை இடிப்பு உண்டது ஒத்தாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books