சீவக சிந்தாமணி 1076 - 1080 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1076 - 1080 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1076. அரும் பெறல் குருசிற்கு அஞ்ஞான்று ஓடிய நாகம் நாணிக்
கரும்பு எறி கடிகையோடு நெய்ம் மலி கவளம் கொள்ளாது
இரும்பு செய் குழவித் திங்கள் மருப்பு இடைத் தடக்கை நாற்றிச்
சுரும்பொடு வண்டு பாடச் சுளிவொடு நின்றது அன்றே

விளக்கவுரை :

1077. பகை புறம் கொடுத்த வேந்தின் பரிவொடு பகடு நிற்பத்
தகை நிறக் குழைகள் தாழ்ந்து சாந்தின் வாய் நக்கி மின்னப்
புகை நிறத் துகிலில் பொன் நாண் துயல் வரப் போந்து வேந்தன்
மிகை நிறக் களிற்றை நோக்கி வேழம் என் உற்றது என்றான்

விளக்கவுரை :

[ads-post]

1078. கொற்றவன் குறிப்பு நோக்கிக் குஞ்சரப் பாகன் கூறும்
இற்றென உரைத்தல் தேற்றேன் இறைவநின் அருளினாம் கொல்
செற்றம் மிக்கு உடைமையால் கொல் சீவகன் இன்ன நாளால்
மற்று இதற்கு உடற்சி செய்ய மதம் இது செறித்தது என்றான்

விளக்கவுரை :

1079. ஈண்டு அழல் குட்டம் போல எரி எழத் திருகி நோக்கிக்
கோண் தரு குறும்பர் வெம் போர் கோக்குழாம் வென்றது உள்ளி
மாண்டது இல் செய்கை சூழ்ந்த வாணிகன் மகனை வல்லே
ஆண் திறம் களைவென் ஓடிப் பற்றுபு தம்மின் என்றான்

விளக்கவுரை :

1080. கன்றிய வெகுளி வேந்தன் கால் வலி இளையர் காய்ந்து
கொன்று உயிர் கொணர ஓடும் கொழுங் குடர்க் கண்ணி மாலை
ஒன்றிய உதிரச் செச்சை ஒள் நிணம் மீக்கொள் தானைத்
தென் திசைக்கு இறைவன் தூதின் செம்மலைச் சென்று சேர்ந்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books