சீவக சிந்தாமணி 1071 - 1075 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1071 - 1075 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1071. தூமம் கமழ் பூந் துகில் சோர அசையாத்
தாமம் பரிந்து ஆடு தண் சாந்தம் திமிர்ந்திட்டு
ஏமன் சிலை வாள் நுதல் ஏற நெருக்காக்
காமன் கணை ஏர் கண் சிவந்து புலந்தாள்

விளக்கவுரை :

1072. மின் நேர் இடையாள் அடி வீழ்ந்தும் இரந்தும்
சொல் நீர் அவள் அற்பு அழலுள் சொரிந்து ஆற்ற
இந் நீரன கண் புடை விட்டு அகன்று இன்பம்
மன் ஆர்ந்து மதர்ப்பொடு நோக்கினள் மாதோ

விளக்கவுரை :

[ads-post]

1073. இன்னீர் எரிமா மணிப் பூண் கிடந்து ஈன்ற
மின்னார் இள மென் முலை வேய் மருள் மென் தோள்
பொன்னார் கொடியே புகழின் புகழ் ஞாலம்
நின் வாள் நெடுங் கண் விலை ஆகும் நிகர்த்தே

விளக்கவுரை :

1074. தோளால் தழுவித் துவர்த் தொண்டை அம் செவ்வாய்
மீளா மணிமேகலை மின்னின் மிளிர
வாள் ஆர் மணிப் பூண் அவன் மாதர் அம் பாவை தன்னை
நாளால் பெற்ற நல் அமிர்து என்ன நயந்தான்

விளக்கவுரை :

1075. சித்திர மணிக் குழை திளைக்கும் வாள் முகத்து
ஒத்து ஒளிர் பவள வாய் ஓவக் கைவினைத்
தத்தரி நெடுங் கணாள் தன்னொடு ஆடும் நாள்
வித்தகற்கு உற்றது விளம்பு கின்றதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books