சீவக சிந்தாமணி 1066 - 1070 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1066 - 1070 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1066. தேதா என வண்டொடு தேன் வரி செய்யப்
போது ஆர் குழலாள் புணர் மென் முலை பாயத்
தாது ஆர் கமழ் தார் மதுவிண்டு துளிப்ப
ஈதாம் அவர் எய்திய இன்பம் அதே

விளக்கவுரை :

1067. முந்நீர்ப் பவளத்து உறை நித்தில முத்தம்
அந்நீர் அமிர்து ஈன்று கொடுப்ப அமர்ந்தான்
மைந்நீர் நெடுங் கண் புருவங்கள் மலங்கப்
பொன்னார் அரிக் கிண்கிணி பூசல் இடவே

விளக்கவுரை :

[ads-post]

1068. கம்பார் களியானை கலக்க மலங்கி
அம்பேர் அரிவாள் நெடுங் கண் புதைத்து அஞ்சிக்
கொம்பே குழைவாய் எனக்கே குழைந்திட்டாய்
வம்பே இது வையகத்தார் வழக்கு அன்றே

விளக்கவுரை :

1069. பூவார் புனல் ஆட்டினுள் பூ நறும் சுண்ணம்
பாவாய் பணைத் தோள் சுரமஞ்சரி தோற்றாள்
காவாது அவள் கண்ணறச் சொல்லிய வெம்சொல்
ஏவோ அமிர்தோ எனக்கு இன்று இது சொல்லாய்

விளக்கவுரை :

1070. நல் தோளவள் சுண்ண நலம் சொல்லுவான்
உற்றீர் மறந்தீர் மனத்துள் உறைகின்றாள்
செற்றால் அரிதால் சென்மின் போமின் தீண்டாது
எற்றே அறியாத ஓர் ஏழையேனோ யான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books