சீவக சிந்தாமணி 1061 - 1065 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1061 - 1065 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1061. மடந்தை திறத்தின் இயைய அம் மகள் கூறி வந்தார்
விடம் தைத்த வேலாற்கு உரைத்தார்க்கு அவன் மெய்ம் மகிழ்ந்தான்
நுடங்கும் கொடி போல்பவள் நூபுரம் ஆர்ப்ப வந்து
தடம் கண்ணவள் தாய் அது கேட்டலும் தக்கது என்றாள்

விளக்கவுரை :

1062. திருவிற்கு அமைந்தான் திசை பத்தும் அறிந்த தொல்சீர்
உருவிற்கு அமைந்தாற்கு அமைந்தாள் என யாரும் ஒட்டப்
பெருகும் கணியின் கணி பேசிய பேது இல் நாளால்
பருகற்கு அமைந்த அமிர்தின் படர் தீர்க்கல் உற்றார்

விளக்கவுரை :

[ads-post]

1063. கரை கொன்று இரங்கும் கடலில் கலி கொண்டு கல் என்
முரசம் கறங்க முழவு விம்ம வெண் சங்கம் ஆர்ப்பப்
பிரசம் கலங்கிற்று என மாந்தர் பிணங்க வேட்டான்
விரை சென்று அடைந்த குழலாளை அவ் வேனிலானே

விளக்கவுரை :

1064. மழை மொக்குள் அன்ன வருமென் முலை மாதர் நல்லார்
இழை முற்று அணிந்தார் எழு நூற்றவர் கோடி செம்பொன்
கழை முற்று தீம் தேன் கரும்பு ஆர் வயல் ஐந்து மூதூர்
குழை முற்று காதின் மணிக் கொம்பொடு நாய்கன் ஈந்தான்

விளக்கவுரை :

1065. கண்ணார் கதிர் மென் முலைக் காம்பு அடும் மென்தோள்
விண்ணோர் உலகினொடும் இந் நிலத்து இல்லாப்
பெண்ணார் அமிர்தே அவன் பெற்ற அமிர்தே
பண்ணார் கிளவிப் பவழம் புரை செவ்வாய்க்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books