சீவக சிந்தாமணி 2481 - 2485 of 3145 பாடல்கள்
2481. எய்த்து நீர்ச்சிலம்பு இன் குரல் மேகலை
வித்தி மாதர் வருத்தம் விளைத்தாள் எனத்
தத்து நீர்த் தவளைக் குரல் கிண்கிணி
உய்த்து ஓர் பூசல் உடன் இட்டன அன்றே
விளக்கவுரை :
2482. ஏந்தி நாங்கள் உடனே இடு பூசலை
வேந்தர் வேந்தன் கொடுங் கோலினன் ஆகி
ஆய்ந்து கேட்டும் அருளான் என்று அவிந்தன
சாந்தம் ஏந்து முலையாள் கலம் தாமே
விளக்கவுரை :
[ads-post]
2483. வீடு மலி உலகினவர் போல விளையாடும்
தோடு மலி கோதையொடு துதைந்த வரை மின் போல்
ஆடு கொடி அணிந்த உயர் அலங்கல் வரை மார்பன்
கூடு மயிர் களையும் வகை கூறல் உறுகின்றேன்
விளக்கவுரை :
2484. உச்சி வரை வளர்ந்து இளமை ஒழிந்த உயர் திண் காழ்
இச் சவிய அல்ல என எழுதியவை ஊன்றிக்
கச்சு விளிம்பு அணிந்த தொழில் கம்பல விதானம்
நச்சு மணி நாகர் உறை நாகம் என விரித்தார்
விளக்கவுரை :
2485. முத்து அகம் நிறைந்த முளை எயிற்று மத யானை
மத்தகமும் திருமகள் தன் வடிவும்பட மாதோ
ஒத்த அகலம் எண் முழம் என்று ஓதி நகர் இழைத்தார்
மொய்த்து எரி செம் பொன் துகளின் நூல் முடிவு கண்டார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2481 - 2485 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books