சீவக சிந்தாமணி 2476 - 2480 of 3145 பாடல்கள்
2476. விரி கதிர் ஆரம் மின்னித் தார் எனும் திருவில் வீசிக்
குரிசில் மா மேகம் பெய்த கொழும் புயல் காம மாரி
அரிவைதன் நெஞ்சம் என்னும் அகன் குளம் நிறைந்து வாள் கண்
கரி அமை சேறு சிந்திக் கலிங்குகள் திறந்த அன்றே
விளக்கவுரை :
2477. தோக்கை அம் துகிலினாள் தன் துணை முலை பொருது சேந்த
ஏக்கு ஒசிவு இலாத வில்லான் இடு கொடி அகலம் இன் தேன்
தேக்கி வண்டு இமிரும் கோதை செல்வன் தார் உழக்க நைந்து
பூக் கொய்து துவண்ட கொம்பின் பொற்பினள் ஆயினாளே
விளக்கவுரை :
[ads-post]
2478. அணித் தகு பவளம் ஏற்பக் கடைந்து முத்து அழுத்தி அம் பொன்
துணித்து அடி விளிம்பு சேர்த்தித் தொழு தகச் செய்த வண்கை
மணிச் சிரல் சிறகு நாண வகுத்த சாந்து ஆல வட்டம்
பணித் தகு மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித் தாரே
விளக்கவுரை :
2479. சேந்து நீண்ட செழுந் தாமரைக் கண்களின்
ஏந்தி மாண்ட முலைக் கண்களின் எழுதிச்
சாந்தம் ஆகம் எழுதித் தகை மாமலர்
ஆய்ந்து சூட்டி அவன் அஞ்சலி செய்தான்
விளக்கவுரை :
2480. மணிசெய் வீணை மழலைக் குழல் பாண்டிலொடு
அணி செய் கோதையவர் பாடிய கீதம்
பணிவு இல் சாயல் பருகிப் பவளக் கொடி
மணியும் முத்தும் மலர்ந்திட்டது ஒத்தாளே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2476 - 2480 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books