சீவக சிந்தாமணி 2471 - 2475 of 3145 பாடல்கள்
2471. பனி மயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய
கனி மயிர் குளிர்ப்பன கண் கொளாதன
எலி மயிர்ப் போர்வை வைத்து எழினி வாங்கினார்
ஒலி மயிர்ச் சிகழிகை உருவக் கொம்பு அனார்
விளக்கவுரை :
2472. விழுத்தகு மணிச் செவி வெண்பொன் கைவினை
எழில் பொலி படியகம் இரண்டு பக்கமும்
தொழில்பட வைத்தனர் துளும்பும் மேகலைக்
கழித்த வேல் இரண்டு கண்ட அனைய கண்ணினார்
விளக்கவுரை :
[ads-post]
2473. அம் கருங்காலி சீவி ஊறவைத்து அமைக்கப் பட்ட
செங் களி விராய காயும் செம் பழுக் காயும் தீம் தேன்
எங்கணும் குளிர்ந்த இன்னீர் இளம் பசுங் காயும் மூன்றும்
தம் களி செய்யக் கூட்டித் தையலார் கை செய்தாரே
விளக்கவுரை :
2474. கை செய்து கமழும் நூறும் காழ்க்கும் வெள் இலையும் காமம்
எய்த நன்கு உணர்ந்த நீரார் இன் முக வாசம் ஊட்டிப்
பெய்த பொன் செப்பும் மாலைப் பெருமணிச் செப்பும் சுண்ணம்
தொய் அறப் பெய்த தூ நீர்த் தொடு கடல் பவளச் செப்பும்
விளக்கவுரை :
2475. தா மணி நானச் செப்பும் சலஞ்சலக் கலன் பெய் செப்பும்
தூ மணித் துகில்கள் ஆர்த்த வலம்புரித் துலங்கு செப்பும்
காமநீர்க் காம வல்லி கவின் கொண்டு வளர்ந்ததே போல்
நாம வேல் நெடுங் கண் பாவை நயப்பன ஏந்தினாரே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2471 - 2475 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books