சீவக சிந்தாமணி 2466 - 2470 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2466 - 2470 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2466. தண்டிலத்து அகத்தில் சாண் மேல் எண் விரல் சமிதை நானான்கு
எண் திசையவரும் ஏத்தத் துடுப்பு நெய் சொரித லோடும்
கொண்டு அழல் கடவுள் பொங்கி வலம் சுழன்று எழுந்தது என்ப
தெண் திரை வேலி எங்கும் திருவிளை யாட மாதோ

விளக்கவுரை :

2467. கரை உடைத் துகிலில் தோன்றும் காஞ்சன வட்டின் முந்நீர்த்
திரை இடை வியாழம் தோன்றத் திண் பிணி முழவும் சங்கும்
முரசொடு முழங்கி ஆர்ப்ப மொய் கொள் வேல் மன்னர் ஆர்ப்ப
அரசருள் அரசன் ஆய் பொன் கலச நீர் அம் கை ஏற்றான்

விளக்கவுரை :

[ads-post]

2468. குளிர்மதி கொண்ட நாகம் கோள் விடுக்கின்றதே போல்
தளிர் புரை கோதை மாதர் தாமரை முகத்தைச் சேர்ந்த
ஒளிர் வளைக் கையைச் செல்வன் விடுத்து அவள் இடக்கை பற்றி
வளர் எரி வலம் கொண்டு ஆய் பொன் கட்டில் தான் ஏறினானே

விளக்கவுரை :

2469. விளங்கு ஒளி விசும்பில் பூத்த அருந்ததி காட்டி ஆன் பால்
வளம் கொளப் பூத்த கோல மலர் அடி கழீஇய பின்றை
இளங் கதிர்க் கலத்தின் ஏந்த அயினி கண்டு அமர்ந்து இருந்தான்
துளங்கு எயிற்று உழுவை தொல் சீர்த் தோகையோடு இருந்தது ஒத்தான்

விளக்கவுரை :

2470. பொன் அம் காழில் பொலிந்த முத்து விதானம் புணர்ந்து தேன்
மன்னு மாலை பல தாழ்ந்து மணப்புகை விம்மி மல்கிய
அன்னத் தூவி அடர் பஞ்சி அவிர் மயிர் ஆதி ஆகப்
பன்னிச் சொன்ன பதின் ஐந்தும் படுத்தார் பாவை மார்களே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books