சீவக சிந்தாமணி 2461 - 2465 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2461 - 2465 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2461. சாண் இடை நெடிய வாள் கண் தளை அவிழ் குவளை பூப்பப்
பூண் உடை முலையின் பாரம் பொறுக்கலாச் சுளிவின் மேலும்
நாண் அட நடுங்கிக் கையால் நகைமுகம் புதைத்த தோற்றம்
சேண் இடை அரவு சேர்ந்த திங்களை ஒத்தது அன்றே

விளக்கவுரை :

2462. முத்து உமிழ் திரைகள் அங்கம் மொய் கொள் பாதாலம் முத்தீ
ஒத்தன வேலை வேள்வி ஒலிகடல் நான்கும் நாண
வைத்த நான் மறையும் நீந்தி வான் குணம் என்னும் சாலி
வித்தி மேல் உலகத்து இன்பம் விளைத்து மெய்கண்ட நீரார்

விளக்கவுரை :

[ads-post]

2463. தரு மணல் தருப்பை ஆர்ந்த சமிதை இம் மூன்றினானும்
விரி மலர் அணிந்த கோல வேதிகை இயற்றி ஆன் நெய்
ஒரு மணி அகலுள் பெய்தோர் பொன் அகல் ஆர்ந்த தூபம்
இருமணி அகலுள் நீர் பெய்து இடவயின் இரீஇயினாரே

விளக்கவுரை :

2464. நெல் பொரி நிறையப் பெய்து நிழல் உமிழ் செம் பொன் மூழிக்
கல் புரி கடவுள் ஆன் பால் அவியொடு கலப்ப வைத்து
முன் பெரியானை ஆகத் தருப்பையான் முடிந்து மூன்று
பொன் புரி வரையும் பொய்தீர் சமிதைகள் இரண்டும் வைத்தார்

விளக்கவுரை :

2465. மந்திர விதியின் மாண்ட சிறு விரல் தருப்பை சூழ்ந்து
முந்து நாம் மொழிந்த நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால்
மந்திரித்து அமைய முக்கால் மண்ணி மற்று அதனை நீக்கிச்
சிந்தித்து மறையின் செந்தீத் தண்டிலத்து அங்கண் வைத்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books