சீவக சிந்தாமணி 2456 - 2460 of 3145 பாடல்கள்
2456. தேன் ஆர் காமன் சிலையும் கணையும் திறை கொண்ட
வான் ஆர் மதிவாள் முகமும் மடமான் மதர் நோக்கும்
கோனார் மகள் தன் வடிவும் நோக்கிக் குடை மன்னர்
ஆனார் கண் ஊடு அழல் போய் அமையார் ஆனாரே
விளக்கவுரை :
2457. வண்டு அலர் கோதை வாள் கண் வனமுலை வளர்த்த தாயர்
கண்டு உயிர் உண்ணும் கூற்றம் கயிறு உரீஇக் காட்டி யிட்டார்
உண்டு உயிர் சிலர் கண் வாழ்க என்று உத்தரா சங்கம் வைத்தார்
தெண் திரை வேலி எங்கும் தீதினது ஆக மாதோ
விளக்கவுரை :
[ads-post]
2458. கண்ணினால் இன்று கண்டாம் கூற்றினைக் காமர் செவ்வாய்
ஒள் நுதல் உருவக் கோலத்து ஒருபிடி நுசுப்பின் தீம் சொல்
வண்ணித்தல் ஆவது இல்லா வரு முலை மதர்வை நோக்கின்
பெண் உடைப் பேதை நீர்மைப் பெருந் தடம் கண்ணிற்று அம்மா
விளக்கவுரை :
2459. அரத்தகம் அகம் மருளிச் செய்த சீறடி அளிய தம்மால்
குரல் சிலம்பு ஒலிப்பச் சென்னிக் குஞ்சிமேல் மிதிப்ப நோற்றான்
திருக்குலாய்க் கிடந்த மார்பின் சீவகன் நாங்கள் எல்லாம்
தரித்திலம் தவத்தை என்று தார் மன்னர் ஏமுற்றாரே
விளக்கவுரை :
2460. கோவிந்தன் என்னும் செம்பொன் குன்றின் மேல் பிறந்து கூர்வேல்
சீவகன் என்னும் செந்நீர்ப் பவள மா கடலுள் பாய்வான்
பூ உந்தி அமுத யாறு பூங் கொடி நுடங்கப் போந்து
தாஇரி வேள்விச் சாலை மடுவினுள் தாழ்ந்தது அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2456 - 2460 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books