சீவக சிந்தாமணி 2451 - 2455 of 3145 பாடல்கள்
2451. கோ மகள் உருவம் ஆய்க் கூற்றம் போந்தது
போமின் உம் உயிர் உயக் கொண்டு போய் மனம்
காமினம் எனக் கலை சிலம்பு கிண்கிணி
தாம் மனும் வாயினால் சாற்றுகின்றவே
விளக்கவுரை :
2452. அருள் இலார் இவள் தமர் அன்னர் ஆயினும்
உருள் திரை உலகு எலாம் உருளும் இன்று எனக்
கருதின கவரி சாந்து ஆற்றி வெண் குடை
அரிவையை மறைத்தன ஆல வட்டமே
விளக்கவுரை :
[ads-post]
2453. கரும்பே தேனே அமிர்தே காமர் மணி யாழே
அரும்பு ஆர் மலர் மேல் அணங்கே மழலை அன்னமே
சுரும்பு ஆர் சோலை மயிலே குயிலே சுடர் வீசும்
பெரும் பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணைமானே
விளக்கவுரை :
2454. அம் மெல் அனிச்சம் மலரும் அன்னத் தூவியும்
வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத
பொம்மென் இலவப் பூம் போது அன நின் அடி போற்றி
இம்மென் கலையார் இடு என்று ஏத்த ஒதுங்கினாள்
விளக்கவுரை :
2455. தூமாண் தூமக் குடம் ஆயிரம் ஆய்ச் சுடர் பொன் தூண்
தாம் ஆயிரம் ஆய்த் தகையார் மணித் தூண் ஒரு நூறு ஆய்ப்
பூ மாண் தாமத் தொகையால் பொலிந்த குளிர் பந்தர்
வேமானியர் தம் மகளின் விரும்ப நனி சேர்ந்தாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2451 - 2455 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books