சீவக சிந்தாமணி 2446 - 2450 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2446 - 2450 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2446. அம் மலர் அடியும் கையும் அணிகிளர் பவழ வாயும்
செம் மலர் நுதலும் நாவும் திருந்து ஒளி உகிரோடு அம் கேழ்
விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதியிட்டாள்
அம்மலர்க் கண்டம் உள் இட்டு அரிவையைத் தெரிவை தானே

விளக்கவுரை :

2447. வாள் மதர் மழைக் கண் நோக்கி வருமுலைத் தடமும் நோக்கிக்
காண் வர அகன்ற அல்குல் கண் விருப்புற்று நோக்கிப்
பாணு வண்டு அரற்றும் கோலச் சிகழிகைப் படியும் நோக்கி
ஆண் விருப்புற்று நின்றார் அவ்வளைத் தோளினாரே

விளக்கவுரை :

[ads-post]

2448. தெருள்கலான் படைத்தவன் காணில் செவ்வனே
மருள்கலா தவர்களும் மருள்வர் மம்மர் நோய்
இருள் இலார் எங்ஙனம் உய்வர் இன்னதால்
அருள் இலார் அவள் நலம் அணிந்த வண்ணமே

விளக்கவுரை :

2449. அலர்ந்த அம் தாமரை அல்லிப் பாவையைப்
புலந்து கண் சிவந்தன போன்று நீர் பிரிந்து
இலங்கி மின் உமிழ்ந்து உலாம் மேனி ஏந்து பொன்
மலர்ந்தது ஓர் கற்பக மணிக் கொம்பு ஆயினாள்

விளக்கவுரை :

2450. இருள் துணித்து இடை இடை இயற்றி வெண் நிலாச்
சுருள் துணித்து ஒரு வழித் தொகுத்தது ஒத்ததே
மருள் தகு மல்லிகை மாலை வல்லவன்
பொருள் தகத் தொடுத்தன புனைந்த பூஞ்சிகை

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books