சீவக சிந்தாமணி 2441 - 2445 of 3145 பாடல்கள்
2441. விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை தெளிர்க்கும் முன்கை
நலம் கிளர் பவளம் நன் பொன் விரல் மணி ஆழி மின்னக்
கலம் தின்று பணைத்த தோளும் கவின் வளர் கழுத்தும் ஆர்ந்த
வலம்புரி ஈன்ற முத்தம் மணி நிலா நக்க அன்றே
விளக்கவுரை :
2442. மா மணி முகடு வேய்ந்த மரகத மணிச் செப்பு அன்ன
தூ மணி முலைகள் தம்மைத் தொழுதகக் கமழும் சாந்தின்
காமரு காம வல்லிக் கொடி கவின் கொண்டு பூத்துத்
தூ மணிக் கொழுந்து மென் தோள் துயல் வர எழுதினாளே
விளக்கவுரை :
[ads-post]
2443. நாண் சுமக்கல் ஆகாத நங்கை நகை மின்னு நுசுப்பு நோவப்
பூண் சுமக்கலாத பொன் ஞாண் வடத்தொடு புரள நோக்கிப்
பாண் குலாய் வண்டு பாடும் படுகணை மறந்து காமன்
காண்கிலேன் கடிய என்னா உருகி மெய் கரந்திட்டனே
விளக்கவுரை :
2444. அவாக் கிடந்து அகன்ற அல்குல் அணிகிளர் திருவில் பூப்பத்
தவாக் கதிர்க்காசு கண்டார் ஆவியைத் தளரச் சூட்டிக்
கவாய்க் கிடந்து அணங்கு நாறும் கண் கொளாப் பட்டு உடுத்தாள்
உவாக் கதிர்த் திங்கள் அம் மென் கதிர்விரித்து உடுத்தது ஒத்தாள்
விளக்கவுரை :
2445. இடைச் செறி குறங்கு கௌவிக் கிம்புரி இளக மின்னும்
புடைச் சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம்போடு ஆர்ப்ப
நடைச் சிறுபாதம் கோல மணிவிரல் அணிந்து நாகத்து
உடைச் சிறு நாவின் தோகை இரீஇயினள் மாலை சேர்ந்தாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2441 - 2445 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books