சீவக சிந்தாமணி 2436 - 2440 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2436 - 2440 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2436. யானையுள் அரசன் தன் அணிகிளர் வல மருப்பு ஈர்ந்து
ஊனம் இல் ஒளிர் செம் பொன் பதித்து ஒளி மணி அழுத்தி
வான் மணம் உறச் செய்த மங்கல மணிச் சீப்புத்
தான் முகில் கழிமதி போல் தன் உறை நீக்கினாளே

விளக்கவுரை :

2437. மை நூற்ற அனைய மா வீழ் ஓதி வகுத்தும் தொகுத்தும் விரித்தும்
கைந் நூல் திறத்தின் கலப்ப வாரிக் கமழும் நானக் கலவை
ஐந் நூல் திறத்தின் அகிலின் ஆவி அளைந்து கமழ ஊட்டி
எந் நூல் திறமும் உணர்வாள் எழில் ஏற்று இமிலின் ஏற்ப முடித்தாள்

விளக்கவுரை :

[ads-post]

2438. கரும்பும் தேனும் அமிழ்தும் பாலும் கலந்த தீம் சொல் மடவாட்கு
அரும்பும் இலையும் மயக்கி ஆய்ந்த முல்லைச் சூட்டு மிலைச்சித்
திருந்து திங்கள் சூழ்ந்த மின்னின் செம்பொன் பட்டம் சேர்த்தி
விரும்பும் முத்தம் மாலை நான்ற விழுப்பொன் மகரம் செறித்தாள்

விளக்கவுரை :

2439. கள்ளும் தேனும் ஒழுகும் குவளைக் கமழ் பூ நெரித்து வாங்கிக்
கிள்ளை வளை வாய் உகிரின் கிள்ளித் திலகம் திகழப் பொறித்துத்
தௌளும் மணிசெய் சுண்ணம் இலங்கத் திரு நீர் நுதலின் அப்பி
உள்ளம் பருகி மதர்த்த வாள் கண் உருவம் மையில் புனைந்தாள்

விளக்கவுரை :

2440. நாகம் மருப்பின் இயன்ற தோடும் நலம் கொள் சுறவுக் குழையும்
போக நீக்கிப் பொரு இல் திருவில் உமிழ்ந்து மின்னுப் பொழியும்
ஏகம் ஆகி எரியும் மணியின் இயன்ற கடிப்பு வாங்கி
மேக விசும்பின் தேவர் விழைய விளங்கச் சேர்த்தினாளே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books