சீவக சிந்தாமணி 2431 - 2435 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2431 - 2435 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2431. கள் அவிழ் கமழ் கோதைக் காவலன் திருமகளை
வெள் அணி மதயானை விழு மணிக் குடம் ஏற்றித்
தௌ அறல் மண்ணு நீர் ஆட்டினர் தேமலர் மேல்
ஒள் இழையவள் ஒத்தாள் உருவ நுண் நுசுப்பினாள்

விளக்கவுரை :

2432. வான் மலர் நுரை சூடி மணி அணி கலன் சிந்தாத்
தான் இள மணல் எக்கர்த் தவழ் கதிர் மணி ஆரம்
ஏனைய நறுஞ் சுண்ணம் குங்குமம் இடும் களியாத்
தேன் இனம் இசை பாடத் தீம் புனல் நடந்ததே

விளக்கவுரை :

[ads-post]

2433. நான்ற பொன் மணி மாலை நகுகதிர்ப் பவளத் தூண்
ஊன்றின ஒளிமுத்த மண்டபத்து ஒளிர் திங்கள்
கான்றன கதிர் காய்த்தும் வட்டணைக் கதிர் முத்தம்
ஈன்ற பொன் விதானத்தின் நீழல் உய்த்து இரீஇயினரே

விளக்கவுரை :

2434. மை அணி மதயானை மத்தக அகல் அல்குல்
நெய் அணி குழல் மாலை நிழல் உமிழ் குழை மங்கை
மெய் அணி கலன் மாலை மின் இரும்துகில் ஏந்திக்
கை அணி குழல் மாலைக் கதிரி முலையவர் சூழ்ந்தார்

விளக்கவுரை :

2435. அவ் வளை அவிர் ஆழிக் கால் பொலிந்து அழகார்ந்த
மை விளை கழுநீர்க் கண் விலாசியும் அணி அல்குல்
கைவளை அலங்கார மாலையும் கமழ் கோதை
நை வளம் மிகு சாயல் நங்கையைப் புனைகின்றார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books