சீவக சிந்தாமணி 2426 - 2430 of 3145 பாடல்கள்
2426. தா இல் தாழ் வடம் தயங்க நீர் உறீஇ
மேவி அச்சுதம் தெளித்த பின் விரைந்து
ஆவியும் புகை சுழற்றி ஆடியும்
வீவு இல் வெம் சுடர் விளக்குக் காட்டினார்
விளக்கவுரை :
2427. உவரி மாக் கடல் ஒல் என் வெண் திரை
இவரி எழுவ போன்று இலங்கு வெண் மயிர்க்
கவரித் தொகை பல வீசும் காவலர்
இவர் இத் தொகை என்பது இன்றி ஆயினார்
விளக்கவுரை :
[ads-post]
2428. அறுகு வெண்மலர் அளாய வாச நீர்
இறைவன் சேவடி கழுவி ஏந்திய
மறுவில் மங்கலம் காட்டினார் மணக்
குறைவு இல் கை வினைக் கோலம் ஆர்ந்ததே
விளக்கவுரை :
2429. ஊன் நிமிர் கதிர் வெள் வேல் உறை கழித்தன போலும்
தேன் இமிர் குவளைக் கண் திரு மகள் அனையாளை
பால் நிமிர் கதிர் வெள்ளி மணைமிசைப் பலர் வாழ்த்தி
வான் நிமிர் கொடி அன்னார் மணி அணை மிசை வைத்தார்
விளக்கவுரை :
2430. வரை விளை வளர் பொன்னே வலம்புரி ஒரு மணியே
திரை விளை அமிர்தமே திரு விழை என ஏத்தி
வரை வளை முழ விம்ம மணி கிளர் ஒலி ஐம்பால்
அரை விளை கலை நல்லார் அறுகின் நெய் அணிந்தனரே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2426 - 2430 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books