சீவக சிந்தாமணி 2421 - 2425 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2421 - 2425 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2421. ஆய்ந்த பால் நிறம் ஆய் பொன் கம்பலம்
வேய்ந்த பொங்கு அணை வெண் பொன் கட்டில் மேல்
நீந்து நித்தில விதான நீழலாற்கு
ஏந்தினார் அணி ஏந்து நீர்மையார்

விளக்கவுரை :

2422. ஈரம் கொன்ற பின் இருள் மணிச் சுடர்
நீர வாய் நிழல் உமிழும் குஞ்சியை
ஆர் அகில் புகை வெறியினால் அமைத்து
ஏர் படச் செய்தார் எழுதிற்று என்னவே

விளக்கவுரை :

[ads-post]

2423. ஈடு இல் சந்தனம் ஏந்து தாமரைத்
தோடின் பயில்வினால் பூசித் தூமலர்
வீடு பெற்றன இன்றொடு என்னவே
சூடினான் அரோ சுரும்பு உண் கண்ணியே

விளக்கவுரை :

2424. மல் பக மலர்ந்து அகன்ற மார்பின் மேல்
வில் பகக் குலாய் ஆரம் வில் இடக்
கற்பகம் மலர்ந்து அகன்றதோ எனப்
பொற்பு அகப் பொலங் கலங்கள் தாங்கினான்

விளக்கவுரை :

2425. உருவம் ஆர்ந்தன உரோமப் பட்டு உடுத்து
எரியும் வார் குழை சுடர இந்திர
திருவில் அன்ன தார் திளைப்பத் தேம் குழல்
அரி பெய் கண்ணியர்க்கு அநங்கன் ஆயினான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books