சீவக சிந்தாமணி 2416 - 2420 of 3145 பாடல்கள்
2416. இழைத்த பொன் நகரின் வெள்ளி இடு மணை மன்னர் ஏத்தக்
குழைப் பொலிந்து இலங்கு காதின் கொற்றவன் இருந்த பின்றை
மழைக் கவின்று எழுந்த வார் கொள் மணி நிற அறுகை நெய் தோய்த்து
எழில் குழை திருவில் வீச மகளிர் நெய் ஏற்று கின்றார்
விளக்கவுரை :
2417. மின் உமிழ் வைரக் கோட்டு விளங்கு ஒளி இமயம் என்னும்
பொன் நெடுங் குன்றம் போலப் பூமி மேல் நிலவி வையம்
நின் அடி நிழலின் வைக நேமி அம் செல்வன் ஆகி
மன்னுவாய் திருவோடு என்று வாழ்த்தி நெய் ஏற்றினாரே
விளக்கவுரை :
[ads-post]
2418. நீடு நிர் மணி நீரும் அல்லவும்
ஆடு நீரன அத்தும் மண்களும்
ஊடு மின் அனார் உரிஞ்சி ஆட்டினார்
கூடி இன்னியம் குழுமி ஆர்த்தவே
விளக்கவுரை :
2419. திருவ மன்னவன் சென்னித் தேர் மன்னர்
பொரு வெண் பொன் குடம் உமிழும் பொங்கு நீர்
பருதி தன் ஒளி மறையப் பால் மதி
சொரியும் தீம் கதிர்த் தோற்றம் ஒத்தவே
விளக்கவுரை :
2420. துளங்கு மா மணித் தூண்கள் நான்கினால்
விளங்கு வெள்ளி வேய்ந்து ஆய்ந்த மாலை சூழ்
வளம் கொள் மா மணிக் கூடம் சேர்த்தினார்
இளங் கதிர் கொலோ இருந்தது என்னவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2416 - 2420 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books