சீவக சிந்தாமணி 2411 - 2415 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2411 - 2415 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2411. மங்கலப் பெருங் கணி வகுத்த ஓரையால்
மங்கல மன்னவன் வாழ்த்த ஏறலும்
மங்கல அச்சுதம் தெளித்து வாய் மொழி
மங்கலக் கருவி முன் உறுத்தி வாழ்த்தினார்

விளக்கவுரை :

2412. முழங்கின இன்னியம் மொய்த்தது ஏத்து ஒலி
கொழுங் கயல் கண்ணினார் கொண்டு பொன் அகல்
இழிந்தனர் திரு மயிர் ஏற்ப நீரதில்
நிழன்றன சாமரை நிரை சங்கு ஆர்த்தவே

விளக்கவுரை :

[ads-post]

2413. பால் கடல் முளைத்த ஓர் பவளப் பூங் கொடி
போல் சுடர்ந்து இலங்கு ஒளிப் பொன் செய் கோதையை
நாள் கடி மயிர் வினை நன் பொன் தாமரைப்
பூக் கடி கோயிலாள் புலம்ப ஆக்கினார்

விளக்கவுரை :

2414. விரைத் தலை மாலை சூட்டி மின் அனார் அம் கை சேப்ப
அரைத்த சாந்து அணிந்த கோட்ட ஆயிரத்து எட்டு வேழம்
நிரைத்தன மண்ணு நீர்க்கு முரசொடு முழவம் விம்ம
வரைத் தலை துவலை போன்று மதம் நிலம் நனைப்ப அன்றே

விளக்கவுரை :

2415. கான் முகம் புதைத்த தௌ நீர் கவர்ந்து பொன் குடங்கள் ஆர்த்தி
ஊன் முகம் புதைத்த வேல் கண்ணவர் களிற்று உச்சி ஏற்றி
வான் முகம் புதைத்த பல் மீன் மதி என மருண்டு நோக்கத்
தேன் முகம் புதைத்த மாலைக் குடை நிழல் திருவில் தந்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books