சீவக சிந்தாமணி 2406 - 2410 of 3145 பாடல்கள்
2406. கொடி எழுந்து அலமரும் கோயில் வாயில்கள்
மடல் எழுந்து அலமரும் கமுகும் வாழையும்
மடி இரும் துகில் உடை மாக் கணாடியும்
புடை திரள் பூரண குடமும் பூத்தவே
விளக்கவுரை :
2407. கடி மலர் மங்கையர் காய் பொன் கிண்கிணி
உடை மணி பொன் சிலம்பு ஒலிக்கும் கோயிலுள்
குடை நிழல் மன்னர் தம் கோதைத் தாது வேய்ந்து
அடி நிலம் பெறாதது ஓர் செல்வம் ஆர்ந்ததே
விளக்கவுரை :
[ads-post]
2408. துளங்கு பொன் குழைகளும் தோடும் சுண்ணமும்
கிளர்ந்து அகில் சாந்து பூக் கமழ்ந்து கேழ்கிளர்
இளங் கதிர் எறி மணிப் பூணும் ஆரமும்
விளங்கி மேல் உலகினை வெறுப்பித் திட்டதே
விளக்கவுரை :
2409. விரிந்து வான் பூத்து என விதானித்து ஆய் கதிர்
அருங் கலப் பொடியினால் ஆய் பொன் பூ மகள்
மருங்குல் போல் குயிற்றிய நகரில் மங்கலப்
பெருந் தவிசு அடுத்தனர் பிணையல் மாலையார்
விளக்கவுரை :
2410. நலம் கிளர் காணமும் மணியும் நன் பொனும்
வலம்புரி முத்தமும் குவித்த மங்கலம்
இலங்கின மணி விளக்கு எழுந்த தீம் புகை
கலந்த ஆயிரத்து எண்மர் கவரி ஏந்தினர்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2406 - 2410 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books