சீவக சிந்தாமணி 2401 - 2405 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2401 - 2405 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2401. நிரந்து கன்னலும் நெய்யும் நீந்தப் பெய்து
இரந்து பால் அமிர்து எங்கும் ஊட்டுவார்
பரந்து பூந் துகில் பல் மணிக் கலம்
சுரந்து கொள்க எனச் சுமக்க நல்குவார்

விளக்கவுரை :

2402. வருக்கையின் பழம் வாழையின் கனி
திருக் கொள் மாங் கனி தெளித்த தேறலை
கருப்புச் சாற்றொடு கலந்து கை செய்து
புரிந்த தெங்கு இள நீரும் பூரிப்பார்

விளக்கவுரை :

[ads-post]

2403. கூந்தல் ஏந்திய கமுகம் காய்க் குலை
ஆய்ந்த மெல் இலை பளிதம் ஆதியா
மாந்தர் கொள்ளை கொண்டு உண்ண மா நிலம்
ஏந்தலாம் படித்து அன்றி ஈட்டுவார்

விளக்கவுரை :

2404. தூமம் ஆர்ந்தன துப்புரவ்வுகள்
ஏமம் ஆயின ஏந்தி நிற்றலால்
நாம நல் நகர் நல் பொன் கற்பகம்
காம வல்லியும் களம் கொண்டிட்டதே

விளக்கவுரை :

2405. வழு இல் மாந்தரும் மாவும் மல்கிய
தொழுதி தன்னை யான் சுமக்கலேன் எனா
முழுதும் மண்மகள் முற்றும் வாய் திறந்து
அழுதிட்டாள் நெய்யும் பாலும் ஆகவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books