சீவக சிந்தாமணி 2396 - 2400 of 3145 பாடல்கள்
2396. திருவின் நல்லவர் செம் மலர்ச் சீறடி
பரவி ஊட்டிய பஞ்சு அரத்தக் களி
விரவி மீ நிலம் சேர்ந்து ஒளி பூத்து உராய்க்
குருதி வான் நிலம் கொண்டது போன்றதே
விளக்கவுரை :
2397. பால் வெண் திங்கள் மணிக்கை படுத்தவை
போலும் ஆடியில் நோக்கிப் பொலம் கலக்
கோலம் செய்பவர் கோல வெறிப்பினால்
மாலை வண்டினம் மாலைக் கண் கொண்டவே
விளக்கவுரை :
[ads-post]
2398. போக மா மழை போழ்ந்து புதத் தொறும்
மாகம் ஏந்துவ போல் மணித் தோரணம்
ஆக நாற்றின தாமம் மணிக் குடம்
ஏக மாநகர் வீதி நிரைத்தவே
விளக்கவுரை :
2399. ஆடல் மங்கையர் கிண்கிணி ஆர்ப்பு ஒலி
பாடல் இன் ஒலி பண் அமை யாழ் ஒலி
மோடு கொள் முழவின் முழக்கு ஈண்டிய
மாட மா நகர் மாக் கடல் ஒத்ததே
விளக்கவுரை :
2400. சுந்தரத் துகள் பூந் துகள் பொன் துகள்
அந்தரத்து எழும் இன் புகையால் அரோ
இந்திரன் நகர் சாறு அயர்ந்து இவ்வழி
வந்து இருந்தது போல் மலிவு உற்றதே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2396 - 2400 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books