சீவக சிந்தாமணி 2391 - 2395 of 3145 பாடல்கள்
2391. வாழை மல்கிய மணிக் குலைக் கமுகொடு நடுமின்
தாழ நாற்றுமின் தாமங்கள் அகில் குடம் பரப்பி
யாழின் பாடலும் ஆடலும் அரங்கு தோறும் இயற்றிப்
போழும் மால் விசும்பு எனப் பல பொலங்கொடி எடுமின்
விளக்கவுரை :
2392. மாலை வாள் முடி மன்னவன் மணவினை எழு நாள்
சீலம் இல்லன சினக் களிறு அகற்றுக என்று அணிந்த
கோலம் ஆர் முரசு இடி உமிழ் தழங்கு என முழங்க
நீல மாக் கடல் நெடு நகர் வாழ்க என அறைந்தார்
விளக்கவுரை :
[ads-post]
2393. முரசம் ஆர்ந்தபின் மூ இரு நாள்கள் போய்
விரைவோடு எங்கணும் வெள் வளை விம்மின
புரை இல் பொன் மணி யாழ் குழல் தண்ணுமை
அரவ வானின் அதிர்ந்த அணி முழா
விளக்கவுரை :
2394. விண் விளக்குவ போல் விரி பூந் துகள்
கண் விளக்கிக் கலந்த வெண் சாந்தினால்
மண் விளக்கி மலர்ப் பலி சிந்தினார்
பண் விளக்கிய பைங்கிளி இன் சொலார்
விளக்கவுரை :
2395. ஆய்ந்த மோட்டின ஆன்படு பால் உலை
போந்து பொங்கிய ஆவியினால் பொலிந்து
ஏந்து மாடங்கள் தாம் இழின் என்பன
பூந் துகில் புறம் போர்த்தன போன்றவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2391 - 2395 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books