சீவக சிந்தாமணி 2386 - 2390 of 3145 பாடல்கள்
2386. ஆழி மால் கடல் அகன் பெருங் கேள்விகள் துறைபோய்
ஊழின் அன்றியும் உறுவினை ஓரையின் முடிப்பான்
சூழி யானையும் துளங்கு பொன் சிவிகையும் உடையான்
வேழ வேந்தற்கு விழுப் பெருங் கணி விரித்து உரைத்தான்
விளக்கவுரை :
2387. ஓங்கு கொற்றவற்கு ஓதிய உயர் பெருநாளால்
வீங்கு வெள்ளி அம் குன்று என விளங்கு ஒளி உடைய
தேம் கொள் மாலையும் திலகமும் அணிந்த திண் குணத்த
பாங்கின் பண்ணின நூற்று எட்டுப் படு மதக் களிறே
விளக்கவுரை :
[ads-post]
2388.விளங்கு வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் பூசித்
துளங்கு மஞ்சிகை துளைச் சிறு காதினுள் துளங்க
வளம் கொள் மாலைகள் சூடி முத்து அணிந்து வண் முரசம்
களம் கொள் வேழத்தின் ஏற்றினர் கடி முரசு அறைவான்
விளக்கவுரை :
2389. கேள்மின் கேள்மின்கள் யாவரும் இனியன கேள்மின்
பூண்மின் நித்தில மணி வடம் பூசுமின் சாந்தம்
வாள் மின் நுண் இடை வருந்தினும் சூட்டு அணிந்து அழகு ஆர்
ஆணம் ஆகிய அருவிலை வண்ணப் பட்டு உடுமின்
விளக்கவுரை :
2390. பிள்ளை வெண் பிறைச் சிறு நுதல் பெரும் பட்டம் அணிமின்
உள்ள மேனியும் ஒளிர் மணிக் கலங்களின் புனைமின்
வள்ளல் வாய்மொழி ஆன் படு பால் அமிர்து அல்லால்
உள்ளம் மேவினும் பிற உணப் பெறீர் எழு நாளும்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2386 - 2390 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books