சீவக சிந்தாமணி 2381 - 2385 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2381 - 2385 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2381. இலங்கு பூண் வரை மார்பு உற எடுத்து அவன் முயங்க
மலங்கி வாள் கண்கள் வருபனி சுமந்து உடன் வெருவிக்
கலங்கு நீர் இடைக் கலக்கு உறு கருங் கயல் இணை போல்
புலம்பி ஓடின செவி உற நெடியன பொலிந்தே

விளக்கவுரை :

2382. வேனல் வாய்ப் பட்டு விரி முகை தளிரொடு கரிந்த
கானக் கார் முல்லை கார் மழைக்கு எதிர்ந்தன போல
மான மங்கையர் வாட்டமும் பரிவும் தம் கணவன்
தேன் நெய் மார்பகம் தீண்டலும் தீர்ந்து ஒளி சிறந்தார்

விளக்கவுரை :

[ads-post]

2383. சேல் உண் கண்ணியர் சிலம்பொடு திலகமும் திருத்தி
மாலை நல்லன மதுக் கமழ் தகையன மிலைச்சிக்
கோல மென்முலைக் குங்குமம் இடு கொடி எழுதிச்
சோலை வேய் மருள்தோள் முத்தும் தொழு தக அணிந்தார்

விளக்கவுரை :

2384. நஞ்சி மேய்ந்து இளங் களிக் கயல் மதர்ப்பன போல
அஞ்சி வாள் கண்கள் மதர்த்தன அலர்ந்து உடன் பிறழப்
பஞ்சு சூழ் மணிமேகலை பரிந்து அவை சொரிய
வஞ்சி நுண் இடை கவின் பெற வைகினன் மாதோ

விளக்கவுரை :

2385. அரி பொன் கிண்கிணி அணிகிளர் சிலம்பொடு சிலம்பும்
திருவச் சீறடிச் செழு மலர்க் கொழுங் கயல் மழைக் கண்
உருவ நுண் இடை ஒளி மணி வருமுலை உரு ஆர்
எரி பொன் மேகலை இலக்கணை கடிவினை நொடிவாம்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books