சீவக சிந்தாமணி 2376 - 2380 of 3145 பாடல்கள்
2376. நோக்கு ஒழிந்து ஒடுங்கினீர்க்கும் நோய் கொளச் சாம்பினீர்க்கும்
பூக்குழல் மகளிர்க் கொண்டான் புறக் கணித்து இடப்பட்டீர்க்கும்
கோத் தரு நிதியம் வாழக் கொற்றவன் நகரோடு என்ன
வீக்குவார் முரசம் கொட்டி விழு நகர் அறைவித்தானே
விளக்கவுரை :
2377. திருமகன் அருளப் பெற்றுத் திரு நிலத்து உறையும் மாந்தர்
ஒருவனுக்கு ஒருத்தி போல உளம் மகிழ்ந்து ஒளியின் வைகிப்
பரு வரு பகையும் நோயும் பசியும் கெட்டு ஒழிய இப்பால்
பெரு விறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேசல் உற்றேன்
விளக்கவுரை :
[ads-post]
இலக்கணையார் இலம்பகம்
2378. அலங்கல் ஏந்திய குங்கும அருவரை மார்பன்
கலந்த காரிகையவர்களைத் தருக என அருள
இலங்கு மாலை வெள் அருவிய எழில் வரை மணந்த
புலம்பு நீள் சுரம் போய்க் கொணர்ந்து அருளொடும் கொடுத்தார்
விளக்கவுரை :
2379. மோடு கொள் நிலா முளைத்து எழு பருதி கண்டு அறியாப்
பாடு வண்டொடு பறவையும் நடுக்குறும் காப்பின்
மாட மா மணிச் சிவிகையின் மயில் என இழிந்தார்
வீடு கண்டவர் போன்று மின்னிடு கொடி அனையார்
விளக்கவுரை :
2380. அன்று சூடிய மாலையர் ஆடிய சாந்தர்
பொன்றி வாடிய மேனியர் பொன் நிறை சுருங்கார்
சென்று காதலன் திரு விரி மரை மலர் அடி மேல்
ஒன்றி வீழ்ந்தனர் குவளைக் கண் உவகை முத்து உகவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2376 - 2380 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books