சீவக சிந்தாமணி 2371 - 2375 of 3145 பாடல்கள்
2371. பைங் கண் உளை எருத்தின் பல் மணி வாள் எயிற்றுப் பவள நாவின்
சிங்க ஆசனத்தின் மேல் சிங்கம் போல் தேர் மன்னர் முடிகள் சூழ
மங்குல் மணிநிற வண்ணன் போல் வார் குழைகள் திருவில் வீசச்
செங் கண் கமழ் பைந்தார்ச் செழுஞ் சுடர் போல் தேர் மன்னன் இருந்தான் அன்றே
விளக்கவுரை :
2372. வார் பிணி முரசம் நாண வான் அதிர் முழக்கம் ஏய்ப்பத்
தார் பிணி தாம மார்பன் தம்பியை முகத்துள் நோக்கி
ஊர் பிணி கோட்டம் சீப்பித்து உறாதவன் ஆண்ட நாட்டைப்
பார் பிணி கறையின் நீங்கப் படா முரசு அறைவி என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2373. கடவுளர் இடனும் காசு இல் கணி பெறு நிலனும் காமர்
தடவளர் முழங்கும் செந்தீ நான் மறையாளர் தங்கள்
இடவிய நிலத்தோடு எல்லாம் இழந்தவர்க்கு இரட்டி ஆக
உடன் அவை விடுமின் என்றான் ஒளி நிலா உமிழும் பூணான்
விளக்கவுரை :
2374. என்றலும் தொழுது சென்னி நிலன் உறீஇ எழுந்து போகி
வென்று அதிர் முரசம் யானை வீங்கு எருத்து ஏற்றிப் பைம் பொன்
குன்று கண்டு அனைய கோலக் கொடி நெடு மாட மூதூர்ச்
சென்று இசை முழங்கக் செல்வன் திரு முரசு அறைவிக் கின்றான்
விளக்கவுரை :
2375. ஒன்றுடைப் பதினை யாண்டைக்கு உறுகடன் இறைவன் விட்டான்
இன்று உளீர் உலகத்து என்றும் உடன் உளீர் ஆகி வாழ்மின்
பொன்றுக பசியும் நோயும் பொருந்தல் இல் பகையும் என்ன
மன்றல மறுகு தோறும் அணி முரசு ஆர்த்தது அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2371 - 2375 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books