சீவக சிந்தாமணி 2366 - 2370 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2366 - 2370 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2366. வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்து கை விதிர்ப்பப்
பருதி போல்வன பால் கடல் நூற்று எட்டுக் குடத்தால்
பொருவில் பூ மழை பொன் மழையொடு சொரிந்து ஆட்டி
எரி பொன் நீள் முடி கவித்தனன் பவித்திரன் தொழுதே

விளக்கவுரை :

2367. தேவ துந்துபி தேவர்கட்கு ஓகை உய்த்து உரைப்பான்
ஆவி அம் புகை அணி கிளர் சுண்ணமோடு எழுந்த
நாவின் ஏத்தினர் அரம்பையர் நரம்பு ஒலி உளர்ந்த
காவல் மன்னரும் கடிகையும் கடவது நிறைத்தார்

விளக்கவுரை :

[ads-post]

2368. திருவ மா மணிக் காம்பொடு திரள் வடம் திளைக்கும்
உருவ வெண் மதி இது என வெண் குடை ஓங்கிப்
பரவை மா நிலம் அளித்தது களிக் கயல் மழைக் கண்
பொருவில் பூ மகள் புணர்ந்தனன் இமையவன் எழுந்தான்

விளக்கவுரை :

2369. மின்னும் கடல் திரையின் மா மணிக்கை வெண் கவரி விரிந்து வீசப்
பொன் அம் குடை நிழற்றப் பொன் மயம் ஆம் உழைக்கலங்கள் பொலிந்து தோன்ற
மன்னர் முடிஇறைஞ்சி மா மணி அம் கழல் ஏந்தி அடி ஈடு ஏத்தச்
சின்ன மலர்க் கோதைத் தீம் சொலார் போற்றி இசைப்பத் திருமால் போந்தான்

விளக்கவுரை :

2370. மந்தார மா மாலை மேல் தொடர்ந்து தழுவ வராத் தாமம் மல்கி
அந்தோ என்று அம் சிறை வண்டு ஏக்கற இன்புகை போய்க் கழுமி ஆய் பொன்
செந்தாமரை மகளே அல்லது பெண் சாராத திருவின் மிக்க
சிந்தா மணி ஏய்ந்த சித்திர மா மண்டபத்துச் செல்வன் புக்கான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books