சீவக சிந்தாமணி 2361 - 2365 of 3145 பாடல்கள்
2361. துளங்கு வெண் மதி உகுத்த வெண் கதிர் தொகுத்தது போல்
விளங்கு வெள்ளி அம் பெரு மலை ஒழிய வந்து எழிலார்
வளம் கொள் மா நகர் மழகதிர் குழீஇயின போலக்
களம் கொண்டு ஈண்டினர் கதிர்முடி விஞ்சையர் பொலிந்தே
விளக்கவுரை :
2362. எண்ணம் என் இனி எழில் முடி அணிவது துணிமின்
கண்ண னாரொடு கடிகையும் வருக என வரலும்
பண்ணினார் முடி பழிச்சிய மணி பொனில் குயிற்றி
அண்ணல் ஆய் கதிர் அலம்வரப் புலமகள் நகவே
விளக்கவுரை :
[ads-post]
2363. விரியும் மாலையன் விளங்கு ஒளி முடியினன் துளங்கித்
திருவில் மால் வரைக் குலவியது அனையது ஓர் தேம் தார்
அருவி போல்வது ஓர் ஆரமும் மார்பிடைத் துயல
எரியும் வார் குழை இமையவன் ஒருவன் வந்து இழிந்தான்
விளக்கவுரை :
2364. கொம்மை ஆர்ந்தன கொடி பட எழுதின குவிந்த
அம்மை ஆர்ந்தன அழகிய மணிவடம் உடைய
வெம்மை செய்வன விழுத்தகு முலைத் தடம் உடைய
பொம்மல் ஓதியர் பொழி மின்னுக் கொடி என இழிந்தார்
விளக்கவுரை :
2365. மையல் யானையின் படு மதம் கெடப் பகட்டு அரசன்
செய்த மும் மதம் போல் திசை திசைதொறும் கமழும்
தெய்வ வாசத்துத் திருநகர் வாசம் கொண்டு ஒழிய
வெய்யர் தோன்றினர் விசும்பிடைச் சிறப்போடும் பொலிந்தே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2361 - 2365 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books