சீவக சிந்தாமணி 2356 - 2360 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2356 - 2360 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2356. தொடித் தோள் மகளிர் ஒரு சாரார் துயரக் கடலுள் அவர் நீந்த
வடிக் கண் மகளிர் ஒரு சாரார் வரம்பு இல் இன்பக் கடல் நீந்தப்
பொடித்தான் கதிரோன் திரை நெற்றிப் புகழ் முப்பழ நீர்ப் பளிங்கு அளைஇக்
கடிப்பூ மாலையவர் ஏந்தக் கமழ் தாமரைக் கண் கழீஇயினான்

விளக்கவுரை :

2357. முனைவன் தொழுது முடி துளக்கி முகந்து செம்பொன் கொள வீசி
நினையல் ஆகா நெடு வாழ்க்கை வென்றிக் கோலம் விளக்கு ஆகப்
புனையப் பட்ட அஞ்சனத்தைப் புகழ எழுதிப் புனை பூணான்
கனை வண்டு ஆர்க்கும் அலங்கலும் கலனும் ஏற்பத் தாங்கினான்

விளக்கவுரை :

[ads-post]

2358. முறிந்த கோலம் முகிழ் முலையார் பரவ மொய் ஆர் மணிச் செப்பில்
உறைந்த வெண் பட்டு உடுத்து ஒளி சேர் பஞ்ச வாசம் கவுள் கொண்டு
செறிந்த கழுநீர்ப் பூப் பிடித்துச் சேக்கை மரீஇய சிங்கம் போல்
அறிந்தார் தமக்கும் அநங்கனாய் அண்ணல் செம்மாந்து இருந்தானே

விளக்கவுரை :

2359. வார் மீது ஆடி வடம் சூடிப் பொற்பு ஆர்ந்து இருந்த வன முலையார்
ஏர் மீது ஆடிச் சாந்து எழுதி இலங்கு முந்நீர் வலம்புரி போல்
கார் மீது ஆடிக் கலம் பொழியும் கடகத் தடக்கைக் கழலோனை
போர் மீது ஆடிப் புறம் கண்ட புலால் வேல் மன்னர் புடை சூழ்ந்தார்

விளக்கவுரை :

2360. தொல்லை நால் வகைத் தோழரும் தூ மணி நெடுந் தேர்
மல்லல் தம்பியும் மாமனும் மது விரி கமழ் தார்ச்
செல்வன் தாதையும் செழு நகரொடு வள நாடும்
வல்லைத் தொக்கது வளம் கெழு கோயிலுள் ஒருங்கே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books