சீவக சிந்தாமணி 2351 - 2355 of 3145 பாடல்கள்
2351. முலை ஈன்ற பெண்ணைத் திரள் தாமங்கள் தாழ்ந்து முற்றும்
மலை ஈன்ற மஞ்சின் மணிப் பூம் புகை மல்கி விம்மக்
கலை ஈன்ற சொல்லார் கமழ்பூ அணைக் காவல் கொண்டார்
கொலை ஈன்ற வேல் கண்ணவர் கூடிய மார்பற்கு அன்றே
விளக்கவுரை :
2352. போர்க் கோலம் நீக்கிப் புகழப் பொன்னின் எழுதப் பட்ட
வார்க் கோல மாலை முலையார் மண்ணுறுப்ப ஆடி
நீர்க் கோலம் செய்து நிழல் விட்டு உமிழ் மாலை மார்பன்
தார்க் கோலம் மான் தேர்த் தொகை மாமன் தொழுது சொன்னான்
விளக்கவுரை :
[ads-post]
2353. எண் கொண்ட ஞாட்பின் இரும்பு எச்சில் படுத்த மார்பர்
புண் கொண்டு போற்றிப் புறம் செய்க எனப் பொற்ப நோக்கிப்
பண் கொண்ட சொல்லார் தொழப் பாம்பு அணை அண்ணல் போல
மண் கொண்ட வேலான் அடி தைவர வைகினானே
விளக்கவுரை :
2354. வாள்களாலே துகைப்பு உண்டு வரை புண் கூர்ந்த போல் வேழம்
நீள் கால் விசைய நேமித் தேர் இமைத்தார் நிலத்தில் காண்கலாத்
தாள் வல் புரவி பண் அவிழ்த்த யானை ஆவித்தாங்கு அன்ன
கோள்வாய் எஃகம் இடம் படுத்த கொழும்புண் மார்பர் அயா உயிர்த்தார்
விளக்கவுரை :
2355. கொழுவாய் விழுப்புண் குரைப்பு ஒலியும் கூந்தல் மகளிர் குழை சிதறி
அழுவார் அழுகைக் குரல் ஒலியும் அதிர் கண் முரசின் முழக்கு ஒலியும்
குழுவாய்ச் சங்கின் குரல் ஒலியும் கொலை வல் யானைச் செவிப் புடையும்
எழுவார் யாழும் ஏத்து ஒலியும் இறைவன் கேளாத் துயில் ஏற்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2351 - 2355 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books