சீவக சிந்தாமணி 2346 - 2350 of 3145 பாடல்கள்
2346. மண் கேழ் மணியின் நுழையும் துகில் நூலின் வாய்த்த
நுண் கேழ் நுசுப்பின் மடவீர் நும்மை நோவ செய்யேன்
ஒண் கேழ்க் கழுநீர் ஒளி முத்தம் உமிழ்வதே போல்
பண் கேழ் மொழியீர் நெடுங் கண் பனி வீழ்த்தல் வேண்டா
விளக்கவுரை :
2347. என் உங்கட்கு உள்ளம் இலங்கு ஈர் வளைக் கையினீரே
மன் இங்கு வாழ்வு தருதும் அவற்றானும் வாழ்மின்
பொன் இங்குக் கொண்டு புறம் போகியும் வாழ்மின் என்றான்
வில் நுங்க வீங்கி விழுக் கந்து என நீண்ட தோளான்
விளக்கவுரை :
[ads-post]
2348. தீத் தும்மும் வேலான் திரு வாய் மொழி வான் முழக்கம்
வாய்த்து அங்குக் கேட்டு மட மஞ்ஞைக் குழாத்தின் ஏகிக்
காய்த் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர் தம் பதிகள் புக்கார்
சேய்ச் செந் தவிசு நெருப்பு என்று எழும் சீறடியார்
விளக்கவுரை :
2349. காது ஆர் குழையும் கடல் சங்கமும் குங்குமமும்
போது ஆர் அலங்கல் பொறையும் பொறை என்று நீக்கித்
தாது ஆர் குவளைத் தடம் கண் முத்து உருட்டி விம்மா
மாது ஆர் மயில் அன்னவர் சண்பகச் சாம்பல் ஒத்தார்
விளக்கவுரை :
2350. ஆய் பொன் புரிசை அணி ஆர் அகன் கோயில் எல்லாம்
காய் பொன் கடிகைக் கதிர்க் கை விளக்கு ஏந்தி மள்ளர்
மேய் பொன் அறையும் பிறவும் விரைந்து ஆய்ந்த பின்றைச்
சேய் பொன் கமல மகள் கை தொழச் சென்று புக்கான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2346 - 2350 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books