சீவக சிந்தாமணி 2341 - 2345 of 3145 பாடல்கள்
2341. செங் கால் குழவி தழீஇயினார் திங்கள் புக்க நீரார்
அம் கான் முலையின் அரும்பால் வரப் பாயினாரும்
பைங் காசும் முத்தும் பவழத்தொடு பைம் பொன் ஆர்ந்த
பொங்கார் முலையார் திரு முற்றம் நிறைந்து புக்கார்
விளக்கவுரை :
2342. பெய் ஆர் முகிலில் பிறழ் பூங் கொடி மின்னின் மின்னா
நெய் ஆர்ந்த கூந்தல் நிழல் பொன் அரி மாலை சோரக்
கையார் வளையார் புலி கண் உறக் கண்டு சோரா
நையாத் துயரா நடுங்கும் பிணை மான்கள் ஒத்தார்
விளக்கவுரை :
[ads-post]
2343. வட்டம் மலர்த் தார் அவனால் அருள் பெற்று வான் பொன்
பட்டம் அணிந்தாள் இவர் தங்களுள் யாவள் என்ன
மடடு ஆர் அலங்கல் அவன் மக்களும் தானும் மாதோ
பட்டார் அமருள் பசும் பொன் முடி சூழ என்றார்
விளக்கவுரை :
2344. மால் ஏறு அனையானொடு மக்களுக்கு அஃதோ என்னா
வேல் ஏறு பெற்ற பிணையின் நனி மாழ்கி வீழ்ந்து
சேல் ஏறு சின்னீர் இடைச் செல்வன போன்று செங் கண்
மேல் ஏறி மூழ்கிப் பிறழ்ந்து ஆழ்ந்த இறந்து பட்டாள்
விளக்கவுரை :
2345. ஐ வாய் அரவின் அவிர் ஆர் அழல் போன்று சீறி
வெய்யோன் உயிர்ப்பின் விடுத்தேன் என் வெகுளி வெம் தீ
மை ஆர் அணல மணி நாகம் கலுழன் வாய்பட்டு
உய்யா என நீர் உடன்று உள்ளம் உருகல் வேண்டா
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2341 - 2345 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books