சீவக சிந்தாமணி 2336 - 2340 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2336 - 2340 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2336. தேம் பெய் கற்பகத் தாரவன் சேர்தலும்
பூம் பெய் கோதை புரிசைக் குழாம் நலம்
ஓம்பு திங்கள் உலந்து சுடர் கண்ட
ஆம்பல் ஆய் மலர்க் காடு ஒத்து அழிந்ததே

விளக்கவுரை :

2337. மாகம் முழக்கின் மணி நாகம் பதைப்பவே போல்
ஆகம் மறவர் அகன் கோயில் புக்கு அம் பொன் மாலைத்
தோகை மடவார் துவர் வாய் துடித்து அஞ்ச வெம்பா
வேகம் உடைத்தாய் விழியாத் தொழித்து ஏகுக என்றார்

விளக்கவுரை :

[ads-post]

2338. செய் பாவை அன்னார் சிலம்பு ஆர்க்கும் மென் சீறடியார்
செய் பூந் தவிசின் மிசை அல்லது சேறல் இல்லார்
மை ஆர்ந்த கண்ணீர் மணிப் பூண் முலை பாய விம்மா
வெய்தா மடவார் வெறு வெம் நிலத்து ஏகினாரே

விளக்கவுரை :

2339. நெருப்பு உற்ற போல நிலம் மோந்துழிச் செய்ய ஆகிப்
பருக்கு என்ற கோலம் மரல் பல் பழம் போன்று கொப்புள்
வருத்தம் மிழற்றிப் பசும் பொன் சிலம்பு ஓசை செய்யச்
செருக்கு அற்ற பஞ்சி மலர்ச் சீறடி நோவச் சென்றார்

விளக்கவுரை :

2340. பொன் பூண் சுமந்து பொரு கோட்டை அழித்து வெம்போர்
கற்பான் எழுந்த முலையார் களம் கண்டு நீங்கி
நல் பூண் அணிந்த முலையார் நிலை கால் சரிந்து
நெற்றி நிறுத்து வடம் வைத்த முலையி னாரும்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books