சீவக சிந்தாமணி 2331 - 2335 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2331 - 2335 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2331. கோள் திக்கு ஓடும் கூம்பு உயர் நாவாய் நெடுமாடம்
கோடிப் பட்டின் கொள் கொடி கூடப் புனைவாரும்
கோடித் தானைக் கொற்றவன் காண்பான் இழை மின்னக்
கோடிச் செம்பொன் கொம்பரின் முன் முன் தொழுவாரும்

விளக்கவுரை :

2332. அம்பு உகை வல் வில் ஆர் கழல் மள்ளர் திறல் ஏத்த
அம்பு கைக் கொண்டால் ஆர் இவற்கு ஈண்டு நிகர் ஆவார்
அம் புகை ஆர்ந்த அம் துகில் அல்குல் அவிர் கோதாய்
அம்பு கைக் காணாம் ஐயனைக் கையில் தொழுது என்பார்

விளக்கவுரை :

[ads-post]

2333. மைத் துன நீண்ட மா மணி மாடம் மிசை ஏறி
மைத்து உன நீண்ட வாள் தடம் கண்ணார் மலர் தூவ
மைத்துன மன்னர் மால் களிறு ஏறிப் புடை சூழ
மைத் துன நீண்ட மாமணி வண்ண அவன் ஒத்தான்

விளக்கவுரை :

2334. ஊது வண்டு அரற்றும் உயர் தாமரைப்
போது பூங் கழுநீரொடு பூத்து உடன்
வீதி மல்கின போல் மிளிர் வேல் கணும்
மாதரார் முகப் பூவும் அலர்ந்தவே

விளக்கவுரை :

2335. வீணை வித்தகன் வேந்து அடு வீங்கு தோள்
காணும் காரிகையார் கதிர் வெம் முலைப்
பூணும் ஆரமும் ஈன்று பொன் பூத்து அலர்ந்து
யாணர் ஊர் அமராபதி போன்றதே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books