சீவக சிந்தாமணி 2326 - 2330 of 3145 பாடல்கள்
2326. அணி முடி அரசர் மாலை அழல் நுதி வாள்கள் என்னும்
மணி புனை குடத்தின் நெய்த்தோர் மண்ணு நீர் மருள ஆட்டிப்
பணை முலைப் பைம் பொன் மாலைப் பாசிழைப் பூமி தேவி
இணை முலை ஏகம் ஆக நுகரிய எய்தினானே
விளக்கவுரை :
பூமகள் இலம்பகம்
2327. கண்ணாடி அன்ன கடி மார்பன் சிவந்து நீண்ட
கண் ஆடி வென்று களம் கண்டு நியமம் முற்றி
கள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்க்
கண் ஆடு யானை அவர் கை தொழச் சென்று புக்கான்
விளக்கவுரை :
[ads-post]
2328. கூடு ஆர் புலியும் முழைக் கோளரி ஏறும் அன்ன
கூடார் மெலியக் கொலை வேல் நினைந்தானை ஏத்திக்
கூடு ஆர மாலைக் குவி மென் முலைக் கோதை நல்லார்
கூடாரம் மாட மயில் போலக் குழீஇ யினாரே
விளக்கவுரை :
2329. மாலைச் செற்றான் மக்களொடு எல்லாம் உடனே இம்
மாலைச் செற்றான் வைந் நுனை அம்பின் இவன் என்பார்
மாலைக்கு இன்றே மாய்ந்தது மாயாப் பழி என்பார்
மாலைக்கு ஏற்ற வார் குழல் வேய்த்தோள் மடநல்லார்
விளக்கவுரை :
2330. நாகம் நெற்றி நல் மணி சிந்தும் அருவி போல்
நாகம் நெற்றி நல் மணி ஓடை நற விம்மும்
நாகம் நெற்றி நல் மலர் சிந்தி நளிர் செம்பொன்
நாகம் நெற்றி மங்கையர் ஒத்தார் மடநல்லார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2326 - 2330 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books