சீவக சிந்தாமணி 2321 - 2325 of 3145 பாடல்கள்
2321. அம்பும் சிலையும் அறுத்தான் என்று அழன்று பொன்வாள்
வெம்பப் பிடித்து வெகுண்டு ஆங்கு அவன் தேரின் மேலே
பைம் பொன் முடியான் படப் பாய்ந்திடுகு என்று பாய்வான்
செம் பொன் உலகின் இழிகின்ற ஓர் தேவன் ஒத்தான்
விளக்கவுரை :
2322. மொய் வார் குழலார் முலைப் போர்க்களம் ஆய மார்பில்
செய்யோன் செழும் பொன் சரம் சென்றன சென்றது ஆவி
வெய்தா விழியா வெருவத் துவர் வாய் மடியா
மை ஆர் விசும்பின் மதி வீழ்வது போல வீழ்ந்தான்
விளக்கவுரை :
[ads-post]
2323. கட்டியங் காரன் என்னும் கலி அரசு அழிந்தது ஆங்குப்
பட்ட இப் பகைமை நீங்கிப் படைத் தொழில் ஒழிக என்னாக்
கொட்டினர் முரசம் மள்ளர் ஆர்த்தனர் குருதிக் கண்ணீர்
விட்டு அழுது அவன்கண் ஆர்வம் மண் மகள் நீக்கினாளே
விளக்கவுரை :
2324. ஒல்லை நீர் உலகம் அஞ்ச ஒளி உமிழ் பருதி தன்னைக்
கல் எனக் கடலின் நெற்றிக் கவுள் படுத்திட்டு நாகம்
பல் பகல் கழிந்த பின்றைப் பல் மணி நாகம் தன்னை
வல்லை வாய் போழ்ந்து போந்து ஓர் மழகதிர் நின்றது ஒத்தான்
விளக்கவுரை :
2325. கோட்டு மீன் குழாத்தின் மள்ளர் ஈண்டினர் மன்னர் சூழ்ந்தார்
மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த முத்தம்
ஆட்டு நீர்க் கடலின் ஆர்த்தது அணிநகர் வென்றி மாலை
கேட்டு நீர் நிறைந்து கேடு இல் விசையை கண் குளிர்ந்த அன்றே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2321 - 2325 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books