சீவக சிந்தாமணி 2316 - 2320 of 3145 பாடல்கள்
2316. புரி முத்த மாலைப் பொன்கோல் விளக்கினுள் பெய்த நெய்யும்
திரியும் சென்று அற்ற போழ்தே திருச்சுடர் தேம்பின் அல்லால்
எரி மொய்த்துப் பெருகல் உண்டோ இருவினை சென்று தேய்ந்தால்
பரிவு உற்றுக் கெடாமல் செல்வம் பற்றி யார் அதனை வைப்பார்
விளக்கவுரை :
2317. நல் ஒளிப் பவளச் செவ்வாய் நல்மணி எயிறு கோலி
வில்லிட நக்கு வீரன் அஞ்சினாய் என்ன வேந்தன்
வெல்வது விதியின் ஆகும் வேல் வரின் இமைப்பேன் ஆயின்
சொல்லி நீ நகவும் பெற்றாய் தோன்றல் மற்று என்னை என்றான்
விளக்கவுரை :
[ads-post]
2318. பஞ்சி மெல் அடியினார் தம் பாடகம் திருத்திச் சேந்து
நெஞ்சு நொந்து அமுத கண்ணீர் துடைத்தலின் நிறைந்த கோல
அஞ்சனக் கலுழி அம் சேறு ஆடிய கடக வண்கை
வெம்சிலை கொண்டு வெய்ய உரும் என முழங்கிச் சொன்னான்
விளக்கவுரை :
2319. இல்லாளை அஞ்சி விருந்தின் முகம் கொன்ற நெஞ்சின்
புல்லாளன் ஆக மறம் தோற்பின் எனப் புகைந்து
வில் வாள் அழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கிக்
கொல் யானை உந்திக் குடை மேலும் ஓர் கோல் தொடுத்தான்
விளக்கவுரை :
2320. தொடுத்த ஆங்கு அவ் அம்பு தொடை வாங்கி விடாத முன்னம்
அடுத்து ஆங்கு அவ் அம்பும் சிலையும் அதன் நாணும் அற்றுக்
கடுத்து ஆங்கு வீழக் கதிர் வான் பிறை அம்பின் எய்தான்
வடித் தாரை வெல் வேல் வயிரம் மணிப் பூணினானே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 2316 - 2320 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books